ஓமிக்ரான் : பள்ளி, கல்லூரிகளில் இதை கட்டாயம் பின்பற்றுங்க - பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, December 24, 2021

ஓமிக்ரான் : பள்ளி, கல்லூரிகளில் இதை கட்டாயம் பின்பற்றுங்க - பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறை

 


சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. விடுதிகளில் சாப்பிடும் போது சில்வர் தட்டுக்கு பதில் மாணவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையால் ஆன தட்டுகளை வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 415 பேரில் 115 பேர் முழுமையாக குணமடைந்து விட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.மகாராஷ்டிராவில் 108 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38, கேரளாவில் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 31 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு இதுவரையில் ஏற்படவில்லை.என்றாலும், ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசின் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். நாட்டில் தற்போது வரை டெல்டா வகை கொரோனா தொற்று பரவல்தான் அதிகமாக உள்ளது. டெல்டா வகை தொற்றைவிட ஒமைக்ரான் வேகமாக பரவும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1.5 முதல் 3 நாள்களுக்குள் இரட்டிப்பாகிறது என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக தலைவர் பல்ராம் பார்கவா ஆகியோர் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவலின் 4வது அலையை உலகம் தற்போது எதிர்கொண்டு வருகிறது. உலக அளவில் கொரோனா பரிசோதனை - பாதிப்பு விகிதம் 6.1 சதவீதமாக உள்ளது. எனவே, மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் ராஜேஷ்பூசன் கூறியுள்ளார். கொரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தயார்நிலையில் இருக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. விடுதிகளில் சாப்பிடும் போது சில்வர் தட்டுக்கு பதில் மாணவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையால் ஆன தட்டுகளை வழங்கவேண்டும். மேலும் வகுப்பறைகளில் குளிர்சாதன கருவிகளை செயல்படுத்தக்கூடாது. கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதை கல்லூரிகள் தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது..

No comments:

Post a Comment