அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.2021-22 ஆம் கல்வி ஆண்டு முதல் கலந்தாய்வு மாறுதல்கள் ஒளிவுமறைவின்றி நடத்துவதற்காக பொது மாறுதல் கலந்தாய்வு கொள்கை வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது மாறுதல் கலந்தாய்வு தற்போது நடைபெற உள்ளது.
கலந்தாய்வுக்கு புதிய கொள்கைஅரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தன்னுடைய விருப்பத்தின்பேரில் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். இடமாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் அல்லது ஒரே ஒன்றியம் / மாவட்டம் அல்லது ஒன்றியம் விட்டு ஒன்றியம் என மூன்று பிரிவுகளாக நடத்தப்படுவது வழக்கம். ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கு புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார். அதற்கேற்ப கலந்தாய்வு நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
ஆகஸ்ட் 1ம் தேதி காலிப் பணியிடம் நிரப்பப்படும்இந்நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியரிகளின் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலனுக்காக ஆண்டுதோறும் பொது மாறுதல் நடத்தப்பட்டு வருவது வழக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளமான :Tnemis ல் உள்ளபடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் ஆகஸ்ட் 1ம் தேதி காலிப்பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.மே மாதத்தில் கலந்தாய்வுஅதன்படி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையிலும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ள பள்ளி கல்வித்துறை செயலாளர் அதிக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.புதியவர்கள் உடனே இடம் மாற முடியாது100 சதவீத பார்வைத்திறன் குறைபாடு உள்ள ஆசிரியர்கள், 40 சதவீதம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய அல்லது உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர் சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணியிட மாறுதல் வழங்கலாம் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் விதவைகள், 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கும் பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கலாம் எனவும் புதியதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் குறைந்த பட்சம் 8 ஆண்டுகள் ஒரு பள்ளியில் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்றும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அதாவது குறைந்தபட்சம் ஒரு கல்வி ஒன்றியத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் பின்னர் 3 ஆண்டுகள் வேறு கல்வி ஒன்றியங்களில் பணிபுரியலாம் என தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment