தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
கர்நாடகாவின் பல மாவட்டங்களில் குறிப்பாக கிராமப்பகுதிகளில் உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தினர் பலரும் கொரோனா பாதிப்பால், அன்றாட வாழ்க்கையை சவாலாக எதிர்கொண்டு வருகின்றனர்.தனியார் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்த்து, கட்டணம் செலுத்த முடியாமல், பல பெற்றோர், மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.ஆனால், மீதமுள்ள கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே, மாற்று சான்றிதழ் வழங்கப்படும் என, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்து வருகின்றனர்.மாற்று சான்றிதழ் இல்லாமல், இரண்டாண்டுகளுக்கு பிறகும், பள்ளியில் சேர்க்க முடியாமல் பல பெற்றோர் சிரமப்படுகின்றனர்.கட்டணத்தை காரணமாக வைத்து தாமதம் செய்யக்கூடாதென அரசு அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும், இது போன்று சில தனியார் பள்ளிகள் செயல்படுவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:கட்டணத்தை செலுத்துமாறு தனியார் பள்ளிகள் அறிவுறுத்தலாம். ஆனால், மாற்று சான்றிதழ் வழங்குவதில் மறுக்க கூடாது.இதனால், அரசு பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படாது. மாணவர்களை பெற்றோர் நம்பிக்கையுடன் சேர்க்கலாம்.மாற்றுச்சான்றிதழ் தர மறுக்கும் பள்ளி நிர்வாகம் குறித்து புகார் அளிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment