தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம்! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, December 8, 2021

தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம்!

 8.11.2021 முதல் 12.11.2021 வரை நடைபெறவிருந்த தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேர்வுக்கால அட்டவணை (20.12.2021 முதல் 24.12.2021 வரை) மற்றும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் குறித்த விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


தேர்வுக்கால அட்டவணை


* 20-12-2021 - திங்கள் - காலை 10 மணி முதல் 12 மணி வரை - தமிழ்


* 21-12-2021 - செய்வாய் - காலை 10 மணி முதல் 12 மணி வரை - ஆங்கிலம்


* 22-12-2021 - புதன் - காலை 10 மணி முதல் 12 மணி வரை - கணிதம்


* 23-12-2021 - வியாழன் - காலை 10 மணி முதல் 12 மணி வரை - அறிவியல்


* 24-12-2021 - வெள்ளி - காலை 10 மணி முதல் 12 மணி வரை - சமூக அறிவியல்


தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல்:


தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்கள் புதிய தேர்வுக்கால அட்டவணையின்படி தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுக்களை 14.12.2021 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


பதிவிறக்கம் செய்யும் முறை:


மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் HALL TICKET-என்ற வாசகத்தை CLICK செய்தால் “ESLC DECEMBER 2021 EXAMINATION - CANDIDATE HALL TICKET DOWNLOAD' என்ற தலைப்பின்கீழ் உள்ள DOWNLOAD என்ற வாசகத்தினை CLICK செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment