விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள், நிரந்தர முடக்கம் அடைந்தவர்களின் குழந்தைகளுக்கு ரூ.75,000 கல்வி நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டுமென பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி விலையில்லா நோட்டு புத்தகங்கள், மாணவர்களுக்கான சீருடைகள், காலணிகள், இலவச பேருந்து பயண அட்டை, சைக்கிள், மடிக்கணினி, மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க ஊக்கத் தொகை, கல்வி உதவித்தொகைகள் என பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, பாதிக்கப்படுகின்ற மாணவ மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 75 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையை தங்களது கல்விச் செலவுக்காகவும் பராமரிப்புக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அனைவரும் தங்களது விண்ணப்பம், படிப்பு சான்றிதழ், பெற்றோரின் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் தகவல் அறிக்கை, பிரேத பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவை இணைக்க வேண்டும். இதனை மாணவர்கள் பள்ளிகளிலேயே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவம்:
No comments:
Post a Comment