6 இணை இயக்குநர்களுக்கு கூடுதல் பணி - அரசாணை வெளியீடு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, December 11, 2021

6 இணை இயக்குநர்களுக்கு கூடுதல் பணி - அரசாணை வெளியீடு

செய்தி மக்கள் தொடர்பு துறையை நிர்வாக பணிகளுக்காக சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை நெல்லை என 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து நிர்வாக பணிகளுக்காக செய்தி தொடர்பு துறை ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 மண்டலங்களை சுற்றியுள்ள மாவட்டங்களை ஒருங்கிணைத்து செயல்பட ஏதுவாக செய்தி மக்கள் தொடர்புத்துறையில் இருந்து அயற்பணியில் பணிபுரியும் இணை இயக்குநர்களை கூடுதலாக பணிகளை மேற்கொள்ள அரசு ஆணையிட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டு அரசாணையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 மண்டலங்களில் அவற்றை சுற்றியுள்ள மாவட்டங்களை ஒருங்கிணைத்து செய்தி மக்கள் தொடர்புத் துறையில் இருந்து அயற்பணியில் பணிபுரியும் இணை இயக்குநர்களை கூடுதலாக பணிகளை மேற்கொள்ளலாம் என செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் அரசுக்கு கருத்துரு சமர்ப்பித்துள்ளார். அரசின் கவனமாக பரிசீலனைக்குப் பின்னர், பணிகளை சிறப்பாக மேற்கொள்ள சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 மண்டலங்களில் அவற்றை சுற்றியுள்ள மாவட்டங்களை ஒருங்கிணைத்து செயல்பட ஏதுவாக செய்தி மக்கள் தொடர்புத்துறையில் இருந்து அயற்பணியில் பணிபுரியும் இணை இயக்குநர்களை கூடுதலாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி ஆணையிடப்படுகிறது.இதன்படி சரவணன், இணை இயக்குனர், மக்கள் தொடர்பு அலுவலர் காவல்துறை இயக்குநர் அலுவலகம் சென்னை மண்டலம் இவர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கூடுதலாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.த.மருதப்பிள்ளை, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம், சென்னை இவர், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர், கரூர் மாவட்டங்களையும், டி.எஸ்.சுப்பிரமணியம், சேலம் மாநகராட்சி இவர் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களையும், கிரிராஜன் -சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இவர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பழனியப்பன், சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் இவர் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கும், ரா.அண்ணா தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் நாகர்கோவில் இவர் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கூடுதலாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment