கர்நாடகாவில் பரபரப்பு.. ஓமிக்ரான் கண்டறியப்பட்ட நபருடன்.. தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதி - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, December 2, 2021

கர்நாடகாவில் பரபரப்பு.. ஓமிக்ரான் கண்டறியப்பட்ட நபருடன்.. தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதி


பெங்களூரு: கர்நாடகாவில் ஓமிக்ரான் கண்டறியப்பட்ட 46 வயதான நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.ஓமிக்ரான் கொரோனா தான் தற்போது உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. வெறும் சில நாட்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஓமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.இதனால், எங்கு டெல்டா கொரோனாவை போல மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துமோ என உலக நாடுகள் அஞ்சுகின்றன. இதனால் பல்வேறு நாடுகளும் புது கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.'ஆனால்..' மத்திய அரசு கூறுவது என்னஓமிக்ரான் கொரோனாஇதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இன்று இந்தியாவிலும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் இரண்டு பேருக்கு இந்த புதிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்தது. இருவருக்கும் லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும் அறிகுறிகளும் கூட தீவிரமாக இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.2 பேருக்குப் பாதிப்புஓமிக்ரான் கண்டறியப்பட்ட இருவரில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் பெங்களூரில் வசித்து வருபவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இரண்டு பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனாஇந்நிலையில், கர்நாடகாவில் ஓமிக்ரான் கண்டறியப்பட்ட அந்த 46 வயதான நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த 5 பேரின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இது அம்மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.என்ன நடந்ததுஓமிக்ரானுக்கு கண்டறியப்பட்ட அந்த 46 வயதான நபர் பெங்களூருவில் சுகாதார ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த நவம்பர் 21ஆம் தேதி அவருக்குக் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும், அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல அவர் வேக்சின் போட்டுள்ளாரா இல்லையா என்பது குறித்த தகவல்கள் உறுதியாகத் தெரியவில்லை...

No comments:

Post a Comment