இன்று தமிழகம்- 33, மகாராஷ்டிரா- 23 பேருக்கு ஓமிக்ரான் தொற்று-இந்தியாவில் பாதிப்பு 300-ஐ கடந்தது! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, December 23, 2021

இன்று தமிழகம்- 33, மகாராஷ்டிரா- 23 பேருக்கு ஓமிக்ரான் தொற்று-இந்தியாவில் பாதிப்பு 300-ஐ கடந்தது!

 தமிழகத்தில் புதியதாக 33 பேருக்கும் மகராஷ்டிராவில் 23 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இந்தியாவில் ஓமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.உலக நாடுகளில் அதிவேகமாக ஓமிக்ரான் பாதிப்பு பரவி வருகிறது. இந்தியாவிலும் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. ஓமிக்ரான் பாதிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 238 ஆக இருந்தது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65, டெல்லியில் 64, தெலுங்கானாவில் 24, கர்நாடகாவில் 19, ராஜஸ்தானில் 21 ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அறிக்கை தெரிவித்திருந்தது.!தமிழகத்தில் 33 பேருக்கு பாதிப்புஇன்று தமிழகத்தில் 33 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34. இதனையடுத்து இந்தியாவில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 271 ஆக உயர்ந்தது.கேரளாவில் அதிகரிப்புஒடிஷாவில் நைஜீரியாவில் இருந்து வந்த 2 பேருக்கு ஓமிக்ரான் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. ஒடிஷாவில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. கேரளாவில் இன்று மேலும் 5 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. கேரளாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது.மகாராஷ்டிராவில் 88 பேருக்கு பாதிப்புஅதேபோல் கர்நாடகாவில் மேலும் 12 பேருக்கு இன்று ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. கர்நாடகா மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31. மகாராஷ்டிராவில் மேலும் 23 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியானது. மகாராஷ்டிராவில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 88. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகபட்ச பாதிப்பு உள்ளது. குஜராத் மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியானது. அம்மாநிலத்தில் ஓமிக்ரான் பாதிப்பு 25 ஆக உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது.ம.பியில் இரவு நேர ஊரடங்குஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். மேலும் பல மாநிலங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பிரதமர் மோடி ஆலோசனைநாட்டில் ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாட்டின் பல மாநிலங்களும் ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தி வருகின்றன

No comments:

Post a Comment