இரண்டாம் ஆண்டு பி.பார்ம்., - போஸ்ட் பேசிக் பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு, இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.
டிப்ளமா பார்மசி முடித்தவர்கள், பி.பார்ம்., படிப்பிலும்; டிப்ளமா நர்சிங் படித்தவர்கள் போஸ்ட் பேசிக் பி.எஸ்சி., நர்சிங் படிப்பிலும் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இந்த படிப்புகளுக்கு, 2021 - 22ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில், வரும் 17ம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தகுந்த ஆவணங்களுடன், 'செயலர், தேர்வு குழு, எண் - 162, ஈ.வெ.ரா., பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10' என்ற முகவரியில் வரும் 20ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.தகவல் தொகுப்பேடு, கட்டணம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தர வரிசை பட்டியல், இடங்கள் ஒதுக்கீடு போன்ற விபரங்கள் இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.'முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்' என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment