கவுரவ விரிவுரையாளர்களுக்கு தொகுப்பூதியமாக 29.07 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, December 7, 2021

கவுரவ விரிவுரையாளர்களுக்கு தொகுப்பூதியமாக 29.07 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

கவுரவ விரிவுரையாளர்களுக்கு தொகுப்பூதியமாக 29.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.இதுகுறித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: 2020-21ம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி -1 ல் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 2423 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஐந்து மாதங்களுக்கான தொகுப்பூதியம் மட்டுமே ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஆறு மாதங்களுக்குண்டான (அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 வரை) தொகுப்பூதியமான 29 கோடியே 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.


ஒப்பளிப்பளிப்பு செய்யப்பட்ட செலவினத்திற்கு தேவைப்படும் கூடுதல் நிதி ஒதுக்கம் 23 கோடியே 47 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை 2021-22ம் ஆண்டிற்கான இறுதி திருத்த நிதி ஒதுக்கத்தில் ஒதுக்கீடு செய்யப்படும். ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தை மேற்கொள்ள கல்லூரி கல்வி இயக்குநருக்கு அதிகாரமளிக்கப்படுகிறது. மேலும் இச்செலவினம் 2021-22ம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கையில் சேர்க்கப்பட்டு சட்டமன்ற பேரவையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.இச்செலவினத்தை 2021-22ம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு உரிய வரைவு விளக்கக் குறிப்பினையும் மற்றும் இறுதி திருத்த நிதி ஒதுக்கத்தில் சேர்ப்பதற்கு உரிய கருத்துருவினையும் தனித்தனியாக உரிய நேரத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநர் நிதித்துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தை மேற்கொள்ள கல்லூரி கல்வி இயக்குநருக்கு அதிகாரமளிக்கப்படுகிறது

No comments:

Post a Comment