பள்ளிகளுக்கு 25ம் தேதி முதல் 2ம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை? - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, December 7, 2021

பள்ளிகளுக்கு 25ம் தேதி முதல் 2ம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை?

 பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, திருப்புதல் தேர்வாக அரையாண்டு தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, செப்., 1 வரை பள்ளி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது, நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பள்ளிகளை தாமதமாக திறந்ததால், பாடத் திட்டத்தில் உள்ள சில பாடங்கள் குறைக்கப்பட்டு, அவை மட்டும் தேர்வில் இடம் பெறும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துஉள்ளது. 



மேலும் காலாண்டு தேர்வுக்கு பதில், முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த மாதம் அரையாண்டு தேர்வு நடத்த வேண்டிய நிலையில், அந்த தேர்வானது திருப்புதல் தேர்வாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி கமிஷனர் சார்பில், இணை இயக்குனர் கோபிதாஸ் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: 



பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கான திருப்புதல் தேர்வை வரும் 17ம் தேதி துவங்க உத்தரவிடப் பட்டுள்ளது.


* 10ம் வகுப்புக்கு, 17ம் தேதி தமிழ்; 18ல் ஆங்கிலம்; 20ல் கணிதம்; 21ல் விருப்ப பாடம்; 22ல் அறிவியல்; 23ல் தொழிற்கல்வி பாடம்; 24ல் சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன


* பிளஸ் 2வுக்கு, 17ல் தமிழ்; 18ல் ஆங்கிலம்; 20ல் இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்; 21ல் வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்; 22ல் கணிதம், விலங்கியல், வணிகவியல், வேளாண்மை; 23ல் உயிரியல், தாவரவியல், வரலாறு; 24ல் கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், அரசியல் அறிவியல் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, 25ம் தேதி முதல் 2ம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படும் என தெரிகிறது.

.com/img/a/

No comments:

Post a Comment