இந்தியாவின் பல மாநிலங்களில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் 170 பேர் ஓமிக்ரான் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகளை அச்சமடைய வைத்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்துள்ள நிலையில், ஆல்பா, டெல்டா வகை வைரஸ்கள் ஆட்டத்தை ஆரம்பித்தன. தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வகை உருமாற்றம் அடைந்த வைரஸ் உலக மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.அமெரிக்கா, இஸ்ரேஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பரவிய ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலும் கால்பதித்தது. மகராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களில் பரவிய நிலையில், தற்போது தமிழகம் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 170 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. ஓமிக்ரான் பாதிப்புதிங்கட்கிழமை காலை இந்தியாவின் கர்நாடகாவில் 5 பேருக்கும், குஜராத்தில் 4 பேருக்கும், டெல்லியில் 6 பேருக்கும் கேரளாவில் 4 பேர் என நாடு தழுவிய ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 170ஐ எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை கிடைத்த தகவல்படி நாடு முழுவதும் ஓமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 ஆக இருந்தது. அதில் மகாராஷ்டிராவில் 54 பேருக்கும், டெல்லியில் 22 பேருக்கும், தெலுங்கானா மாநிலத்தில் 20 பேருக்கும், ராஜஸ்தானில் 17 பேருக்கும் கர்நாடகாவில் 14 பேருக்கும் கேரளாவில் 11 பேருக்கும் குஜராத் மாநிலத்தில் 9 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 2 பேருக்கும், ஆந்திரபிரதேசம், சண்டிகர், தமிழ்நாடு, மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.புதிய பாதிப்புகள்இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை இரவு குஜராத்தில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 11 எட்டியுள்ளதாக தெரிவித்தது. 45 வயதான வெளிநாடு வாழ் இந்தியர் நாடு திரும்பிய நிலையில் அவருக்கும், தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் புதிய பாதிப்பு கண்டறியப்பட்டதாக கூறியிருந்தது.கர்நாடகா, டெல்லியில் பாதிப்புஇதேபோல கர்நாடக மாநிலத்தில் சிவமொக்கா பத்ராவதி உடுப்பி மற்றும் மங்களூருவில் முறையே ஐந்து நபர்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் கர்நாடக மாநிலத்தின் பாதிப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை காலை டில்லி சுகாதாரத்துறை ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது. அங்கு மட்டும் 6 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில் நான்கு பேர் மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் எனவும், 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 12 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்தியாவில் மொத்த எண்ணிக்கைஇதேபோல கேரள மாநிலத்தில் திங்கட்கிழமை காலை நான்கு புதிய ஓமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டது. ஞாயிற்றுக் கிழமையிலிருந்து மாநிலம் முழுவதும் 11 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கிடைத்துள்ள திருத்தப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியா முழுவதும் உள்ள ஓமிக்ரான் எண்ணிக்கை இப்போது 170 ஆக உள்ளது, மாநில வாரியாக மகாராஷ்டிரா 54 பேருக்கும், டெல்லி 28 பேருக்கு, தெலுங்கானா 20 பேருக்கும், ராஜஸ்தானனில் 17 பேருக்கும் , கர்நாடகாவில் 18 பேருக்கும், கேரளாவில் 15 பேர், குஜராத் 11, உத்தரப் பிரதேசம் 2, மற்றும் ஆந்திரப் பிரதேசம், சண்டிகர், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒன்று. என பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment