தமிழகத்தில் ஜனவரி 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. புதிய கட்டுபாடுகள் அறிவிப்பு.. முழு விவரம் இதோ! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, December 31, 2021

தமிழகத்தில் ஜனவரி 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. புதிய கட்டுபாடுகள் அறிவிப்பு.. முழு விவரம் இதோ!

 

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் விவரம் பின்வருமாறு:-* சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்றபொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போதுநடைமுறையிலுள்ள தடை தொடரும்.2) மழலையர் விளையாட்டு பள்ளிகள் ( ), நர்சரிபள்ளிகள் (, ) செயல்பட அனுமதி இல்லை, 3) அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புவரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடைவிதிக்கப்படுகிறது. 4) அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள்நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள்உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும், * 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிவகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள்நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றிசெயல்படும். * வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போதுநடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்துகடைபிடிக்கப்படும்.* உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள்மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும்அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். * பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் ( / ) 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படஅனுமதிக்கப்படுகிறது. * திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம்100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். * இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல்அனுமதிக்கப்படும். * துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில்50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடைஉரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். * கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள்,விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50%வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். * உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள்ஒரு நேரத்தில் 50%வாடிக்கையாளர்களுடன் செயல்படஅனுமதிக்கப்படும்

No comments:

Post a Comment