TNPSC EXAMS SYLLABUS - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, November 13, 2021

TNPSC EXAMS SYLLABUS


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் மூலம் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகள் நடத்தப்பட்டுவருகிறது. அரசுத்துறைகளில் ஆரம்ப பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வின் மூலம் காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டு வரப்படுகிறது. குரூப் 4 தேர்வுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும் என்பதால் இந்த போட்டி தேர்வில் லட்ச கணக்கானோர் போட்டியிடுகின்றனர். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் உள்ளிட்ட பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது. இத்தேர்விற்க்கான வயது தகுதி கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு. TNPSC ஆண்டுத்திட்டம்படி கடந்த மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், கொரோனா காரணமாக கடந்த 2020 முதல் புதிதாக குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் திட்டமிட்டப்படி, குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறாமல் உள்ளன. தற்போது இயல்பு நிலை திரும்புவதால், குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மழை வெள்ளம் காரணமாக டிஎன்பிஎஸ்சி 2-ம் மற்றும் 3-ம் நிலைமொழித்தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கான பாடக்குறிப்புகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது. தமிழ் மொழியில் எழுதுபவர்கள் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் உள்ளிட்ட பாடக்குறிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதற்கான பாடப்பிரிவின் முழுவிவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. அதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் உள்ளவர்கள் இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Tnpsc group 4, VAO Exam syllabus : click here

No comments:

Post a Comment