NHIS 2021 - புதிய மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பான விரிவான தொகுப்பு. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, November 14, 2021

NHIS 2021 - புதிய மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பான விரிவான தொகுப்பு.

 


 

.com/img/a/

 புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2021 - தொடர்பான விரிவான தொகுப்பு :

அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு , பணச்செலவில்லா மருத்துவ வசதியை வழங்கும்பொருட்டு , ஏற்கனவே அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் -2016 , 30.06.2021 உடன் முடிவடைந்ததை தொடர்ந்து , புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் , 2021 அமல்படுத்தப்பட்டு , யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


 புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் , 2021 - இல் உள்ள காப்பீட்டு விவரங்கள் மற்றும் வசதிகள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன :


 1.காப்பீட்டு காலம் :

 மருத்துவ காப்பீட்டு வசதியானது , 01.07.2021 முதல் 30.06.2025 வரையிலான 4 வருட தொகுப்பு ஆண்டிற்கு வழங்கப்படும் 

2. காப்பீட்டு தொகை : 

அரசாணை ( பல்வகை ) எண் .160 , நிதி ( ஊதியம் ) துறை , நாள் : 29.06.2021 இணைப்பு -1 இல் வகைப்படுத்தப்பட்டுள்ள 203 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ .5,00,000 / - ( ரூபாய் ஐந்து இலட்சம் ) வரை வழங்கப்படும்.

இணைப்பு- IA- இல் வகைப்படுத்தப்பட்டுள்ள 7 வகையான நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ .10,00,000 / - ( ரூபாய் பத்து இலட்ச வரை வழங்கப்படும்.


மேலும் அரிதான நோய்கள் மற்றும் சிகிச்சைகளுக்கு , ரூ .20,00,000 / - ( ரூபாய் இருபது இலட்சம் ) வரை , நிதிதுறைச் செயலாளர் , மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி ஆகியோர்களை கொண்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்பேரில் வழங்கப்படும்.


கண்புரை சிகிச்சைக்கு அதிகபட்சமாக ஒரு கண்ணிற்கு ரூ .30,000 / வரையிலும் மற்றம் கர்ப்பப்பை நீக்கத்திற்கு அதிகபட்சமாக ரூ .50,000 / - வரையிலும் வழங்கப்படும் . 


3. காப்பீட்டு சந்தா தொகை : 


புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் - 2021 - இல் , மாதாந்திர சந்தா ரூ .300 / ( ரூபாய் முன்னூறு மட்டும் ) ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். 

கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மாநில அரசு ஊழியர்களாக இருப்பின் , இருவரில் யார் இளையவரோ , அவரது ஊதியத்தில் மட்டும் சந்தா தொகை பிடித்தம் செய்யப்படும்.


 4.காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கு தகுதியற்றவர்கள் :


 கீழ்கண்ட வகையில் நியமணம் பெற்று பணிபுரிபவர்கள் , இத்திட்டத்தில் இணைவதற்கு தகுதியற்றவர்கள்.

.com/img/a/

5. அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கான காப்பீடு : 

( i ) மேற்கண்ட அரசாணையில் உள்ள இணைப்பு- II இல் , அங்கீகரிக்கப்பட்ட 1169 மருத்துவமனைகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மருத்துவ மனைகளில் , அரசாணையின் இணைப்பு -1 இல் வகைப்படுத்தப்பட்டுள்ள 203 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு பணச்செலவில்லா இணைப்பு -IA இல் சிகிச்சை ரூ .5 இலட்சம் வரையிலும் மற்றும் வகைப்படுத்தப்பட்டுள்ள 07 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு பணச்செலவில்லா சிகிச்சை ரூ .10 இலட்சம் வரையிலும் வழங்கப்படும்.


( ii ) அரசாணையின் இணைப்பு- IV இல் குறிப்பிடப்பட்டுள்ள , சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் 180 வகையான பொருட்களுக்கான செலவு தொகைகள் , பணச்செலவில்லா சிகிச்சையின் வரம்பிற்குள் வராது.


( iii ) அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் , அரசாணையின் இணைப்பு -1 மற்றும் IA இல் வகைப்படுத்தப்பட்டுள்ள நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு , அச்சிகிச்சை அவசர தன்மை உடையது ( Emergency Care ) எனக் கருதப்படும் பட்சத்தில் , சிகிச்சைக்கான தொகையை மருத்துவமனையில் செலுத்திய பின் , அத்தொகையில் , தகுதியான செலவுத் தொகையை மீளப்பெறலாம்.


( iv ) அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் , அரசாணையின் இணைப்பு -1 மற்றும் IA இல் வகைப்படுத்தப்பட்டுள்ள நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு , அச்சிகிச்சை அவசர தன்மையற்றது ( Non - Emergency Care ) எனக் கருதப்படும் பட்சத்தில் . சிகிச்சைக்கான தொகையை மருத்துவமனையில் செலுத்திய பின் , அச்சிகிச்சையை அங்கீகரிக்கப்பட்ட கடைநிலை ( Lowest Grade ) மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால் ஏற்படும் செலவீனத் தொகையில் 75 % தொகையை மீளப்பெறலாம்.


6. தகுதியான குடும்ப உறுப்பினர்கள் : 


1. கணவன் ( அல்லது ) மனைவி . 

2.குழந்தைகள் 25 வயது பூர்த்தி அடையும் வரை அல்லது திருமணம் ஆகும் வரை - ( இதில் எது முன்னரோ 

3. திருமணம் ஆகாத அரசு ஊழியர்களின் பெற்றோர்கள் . ( அரசு ஊழியருக்கு திருமணம் ஆகும் வரை ) 

4. விவாகரத்து குழந்தைகள் இல்லாத பெற்ற அரசு ஊழியருக்கு பட்சத்தில் , அவரது பெற்றோர்கள் . ( விவாகரத்து பெற்ற அரசு ஊழியர் மறுமணம் செய்துகொள்ளும் வரை ) 

5. அரசு ஊழியரை சார்ந்திருக்கும் குறைந்தபட்சம் 40 % சதவீத அளவில் உடல் ஊனமுற்ற மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் வயது வரம்பின்றி . 


7. காப்பீட்டு தொகை தொடர்பான குறைதீரப்பு முறையீடு : 


இத்திட்டத்தில் சந்தாதாரர்கள் சிகிச்சை மற்றும் காப்பீட்டு தொகை பெறுவதில் ஏற்படும் குறைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநரிடம் தொடர்புடைய மருத்துவ ஆவணங்களின் நகல்கள் மற்றும் தொகை மீளப்பெறுவதற்கான படிவத்துடன் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் மனு செய்து முறையிடலாம்.

 முறையீடு தொடர்பாக , மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் அவர்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு , தொகை மீளப்பெறுவது தொடர்பான தகுதி அறிக்கையுடன் மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் நடைபெறும் மாவட்ட அளவிலான அதிகாரம் பெற்ற குழு கூட்டத்தின் பரிந்துரைக்கு மேலனுப்பப்படும்.

மாவட்ட அளவிலான அதிகாரம் பெற்ற குழுவில் கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் , சந்தாதாரர் மேல்முறையீடு செய்ய விரும்பினால் , மாவட்ட அளவிலான அதிகாரம் பெற்ற குழுவிடமிருந்து பதில் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் , சென்னை கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையரிடம் மேல்முறையிடலாம்.


8.உதவி தொலைபேசி எண் மற்றும் தொடர்பு அதிகாரிகள் :


 புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - 2021 இன் விவரங்கள் அறிய , அரசாணையின் இணைப்பு- v இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ( 1800 233 5666 ) தொடர்பு கொள்ளலாம். அவ்விணைப்பில் , காப்பீட்டு நிறுவனத்தின் தலைமையிட முகவரியும் தெரிவிக்கப்பட்டுள்ளன . மேலும் இணைப்பின் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான காப்பீட்டு நிறுவன தொடர்பு அதிகாரிகளின் ( Nodal Officers ) அலைபேசி சி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன . 

 இணைப்பு : மேற்கண்டவாறு...


NHIS 2021 Full Details pdf - Download here...

No comments:

Post a Comment