சி.பி.எஸ்.இ.10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான முதல் பொது பருவத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2021-2022-ம் கல்வியாண்டுக்கான பள்ளி வகுப்புகளை சரியான நேரத்தில் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், பொதுத்தேர்வுகள் நடைபெறும் மார்ச், ஏப்ரல் மாதத்திற்குள் பாடங்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவித்து இருந்தது. முதல் பகுதி தேர்வு நவம்பர்- டிசம்பர் மாதங்களிலும், 2-வது பகுதி தேர்வு மார்ச்- ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஏற்ப பாடங்கள் பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் தற்போது சி.பி.எஸ்.இ.10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான முதல் பொது பருவத்தேர்வு-கான அட்டவணையை வெளியிட்டுள்ளனர். நவ.30-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெறும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment