தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களின் பரப்பளவுகளை அளவீடு செய்து அனுப்புமாறு விளையாட்டு மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டு மேம்பாட்டுத் துறை அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாட அறிவு தாண்டி , உடல் மற்றும் மன வலிமைக்கான பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும். அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களின் பரப்பளவுகளை புகழ்பெற்ற கூகுள் செயலி மூலமாக அளவீடு செய்ய வேண்டும். அதன் பின்பு அந்த அளவீடுகளை விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு அனுப்ப வேண்டும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
இதன்படி அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களில் உள்ள வசதிகள் குறித்தும் , அந்த மைதாங்களின் பரப்பளவுகளை குறித்தும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரிர்கள் https://play.google.com/store.app/details id=com.dewdev.lat.longfinder_full_final என்ற செயலியை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானத்தை பற்றிய முறையான அளவீடுகளை தெரிவிக்க வேண்டும்.
No comments:
Post a Comment