கல்வி கடன் பெற வங்கிக்கு செல்லும்போது சில முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும், அவை முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே, உங்களுக்கு கடன் வழங்க முடியுமா? இல்லையா? என்று வங்கி முடிவு செய்யும். கல்விக்கடன் வழங்க, விண்ணப்பதாரர்களுக்கு வங்கிகள் பல்வேறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விதிக்கின்றன. ஒவ்வொரு கல்விக் கடன் விண்ணப்பதாரரும் வங்கி அல்லது நிதி நிறுவனம் வழங்கும் அதிகபட்ச சேவைகளைப் பெறுவதற்கு இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும்.
கடன் வழங்கும் நிறுவனங்கள் கோரும் அனைத்து ஆவணங்களையும் வழங்க வேண்டியது அவசியம். கல்வி கடன்கள் விரைவாகவும், எளிதாகவும் அனுமதிக்கப்படுவதற்கு தெளிவான மற்றும் துல்லியமான ஆவணங்கள் தேவை. கடன் விண்ணப்ப செயல்முறையைத் தொடங்குவதற்கு தேவையான ஆவணங்களின் முழுமையான பட்டியலைத் தயாரிப்பது முக்கியம். கல்விக் கடனின் விதிமுறைகள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டாலும், தேவையான ஆவணங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.,
பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம் :
கடனுக்கான முக்கிய ஆவணங்களில் ஒன்று உங்கள் கடன் விண்ணப்பப் படிவம். நீங்கள் முதலில் சமர்ப்பிக்கும் ஆவணத்தில் பிழையற்ற மற்றும் கையொப்பமிடப்பட்ட கல்விக் கடன் படிவத்தை இணைக்க வேண்டும். நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தால், பூர்த்திசெய்யப்பட்ட படிவத்தை பிரின்ட் செய்து இணைக்கலாம். எந்த பிழையும் இன்றி, உங்கள் விண்ணப்பப் படிவம் முழு தகவல்களோடு பூர்த்தி செய்யப்படவேண்டும். கல்வி நிறுவனத்தின் சேர்க்கை கடிதம் (Admission letter) ; நீங்கள் கடன் வாங்கும் வங்கியில் நீங்கள் குறிப்பிட்ட படிப்பிற்கான அட்மிஷன் பெற்றுள்ள சான்றை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த கடிதம் நீங்கள் வங்கிக்கு வழங்கக்கூடிய மிக முக்கியமான ஆவணமாகும். நீங்கள் வெளிநாட்டுப் படிப்பிற்காக கல்விக் கடன் பெற்றிருந்தால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து மாணவர் பெற்ற சேர்க்கை கடிதத்தின் நகலை இந்தக் கடனுக்கான ஆவணத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் கடிதத்துடன் நிறுவனத்தின் லெட்டர்பேடில் உள்ள நிறுவனத்தின் முகவரியும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் இணை விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் : கடன் விண்ணப்பப் படிவத்துடன் விண்ணப்பதாரர் மற்றும் இணை விண்ணப்பதாரரின் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பத்தில், புகைப்படம் ஒட்டப்பட வேண்டும் என்றால், குறிப்பிட்டுள்ள இடத்தில் புகைப்படத்தை இணைக்கவும். கடன் விண்ணப்பத்தில் புகைப்படத்தை சமர்ப்பிக்கும் போது, உங்களின் சமீபத்திய புகைப்படமாக இருக்க வேண்டும் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். விண்ணப்பதாரர் மற்றும் இணை விண்ணப்பதாரரின் புகைப்பட ஐடி (அடையாளச் சான்று) : மற்ற கடனைப் போலவே கல்விக் கடனுக்கும் நீங்கள் அடையாளச் சான்று அல்லது புகைப்பட ஐடியை வழங்க வேண்டும். நிரந்தர கணக்கு எண் (பான்/ PAN) அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை, புகைப்பட ஐடி அல்லது அடையாளச் சான்றாக நீங்கள் வழங்கலாம். உங்களிடம் பாஸ்போர்ட் இருந்தால், அடையாளச் சான்றாக பாஸ்போர்ட்டின் நகலுக்கு முன்னுரிமை அளிக்கவும். விண்ணப்பதாரர் மற்றும் இணை விண்ணப்பதாரரின் வசிப்பிட சான்று (பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று) : உங்கள் குடியுரிமையை நிரூபிக்க நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்ற சான்றை வழங்க வேண்டும். பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வாக்களர் அட்டை ஆகியவற்றை வசிப்பிடச் சான்றாக வழங்கலாம். நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள் மற்றும் உங்கள் தற்போதைய முகவரியும் உங்கள் ஆவண முகவரியும் வேறுபட்டிருந்தால், நீங்கள் வசிக்கும் ஆதாரமாக வாடகை ஒப்பந்தத்தையும் சமர்ப்பிக்கலாம். கல்வி சம்மந்தப்பட்ட ஆவணங்கள் : கல்விக் கடன் விண்ணப்பிக்கும் போது, உங்கள் கல்வி சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மிகவும் முக்கியமானவை. உங்கள் பள்ளி இறுதியாண்டு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் (Higher Secodndary marksheet), இளங்கலை பட்டப்படிப்பு மதிப்பெண் பட்டியல், CAT அல்லது CET நுழைவுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் (பொருந்தினால்), GRE, GMAT, TOFEL, IELTS மார்க்ஷீட் (பொருந்தினால்), உதவித்தொகை ஆவணம் போன்ற ஆவணங்கள் கல்வி ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். வங்கிக்கணக்கு அறிக்கை : கடந்த 3 மாதங்களுக்கான வங்கிக்கணக்குஅறிக்கையின் நகலையும், கடன் ஆவணத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருந்தால், அனைத்து கணக்குகளின் அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும். சம்பளக் கணக்கு, வணிகக் கணக்கு மற்றும் தொழில்முறை கணக்கு போன்ற பல்வேறு கணக்குகள் இருந்தால், அதன் விவரங்களும் தேவைப்படும். வருமானச் சான்று : விண்ணப்பிக்கும் நபர் பணியில் இருந்தால், 2 ஆண்டு வருமான வரி அறிக்கை மற்றும் கடந்த மூன்று மாத சம்பள அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் சுயதொழில் செய்பவராக இருந்தால் 2 வருட வருமான வரிக் கணக்கு, வணிகச் சான்று மற்றும் வருமானச் சான்று ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். மேற்கூறிய ஆவணங்களைத் தவிர்த்து, கல்விக் கடன் விண்ணப்பதாரர்கள் கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதற்கு தங்கள் நிதி வசதியை நிரூபிக்க வேண்டும். சில நேரங்களில் வங்கிகள் கல்விக் கடனை மறுநிதியளித்து கடன் தொகையைச் சேர்க்க, நீட்டிக்கப்பட்ட கடன் காலங்களை வழங்க அல்லது கடனைத் திருப்பிச் செலுத்துவதை எளிதாக்குவதற்காக EMIகளை மாற்ற அனுமதிக்கின்றன. விண்ணப்பதாரர் வழங்கிய பொருத்தமான நிதி ஆதாரங்கள் வரி மற்றும் பிற நன்மைகளைப் பெற இது உதவியாக இருக்கும். கல்விக் கடன் பெறுவதற்கான அடிப்படை தகுதியில் ஒன்று, நீங்கள் இந்தியக் குடிமகன் என்பது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள தகுதிகளில் ஏதேனும் ஒன்று பொருந்தினால், கடன் விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் வசிக்காத இந்தியர் (NRI) வெளிநாட்டில் குடியேறிய இந்திய குடிமக்கள் (OCI) இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (PIO) இந்தியாவில் படிக்க விரும்பும் வெளிநாட்டில் உள்ள இந்திய பெற்றோருக்கு பிறந்த மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் முழுமையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். இது கடன் வாங்குபவர்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும். படிப்புச் செலவுகளுக்காக கடன் வாங்கும்போது அதிகபட்ச கடன் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், நீங்கள் ஒரு குறைவான கட்டணத்தில் படிப்பை முடிக்க முடியும். எனவே கடன் தொகையையும் குறைக்க முயற்சிக்கவும்.
No comments:
Post a Comment