சோஷியல் மீடியாவை மூடு சோஷியல் சயின்ஸை படி' கலெக்டர் ‘ட்விட் அறிவுரை’- கலெக்டர் அறிவுரை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, November 30, 2021

சோஷியல் மீடியாவை மூடு சோஷியல் சயின்ஸை படி' கலெக்டர் ‘ட்விட் அறிவுரை’- கலெக்டர் அறிவுரை

 விருதுநகர் கலெக்டர், மாணவர்களுக்கு கூறிய ட்விட் அறிவுரை மீண்டும் வைரலாகி வருகிறது. விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிடும் பதிவுகள் வைரலாகி வருகிறது. நேற்று (நவ.29) கனமழை பெய்யும் என்ற வானிலை மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார்.  அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்திருந்தார். இதற்கு பல மாணவர்கள் பதிலளித்திருந்தனர். இதற்கு கோகுல் என்ற மாணவர், ‘‘விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியருக்கு அனைத்து மாணவர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கி

றேன்’’ என பதிவிட்டிருந்தார்.  அதற்கு கலெக்டர் மேகநாதரெட்டி, ‘‘தம்பிகளா... நன்றியெல்லாம் போதும். சோஷியல் மீடியா, பேஸ்புக் பக்கங்களை மூடிவிட்டு, சோஷியல் சயன்ஸ் புத்தகத்தை திறந்து, அமர்ந்து படியுங்கள். நாளை பள்ளியில் தேர்வு உள்ளது. பாதுகாப்பாக இருங்கள்’’ என அறிவுரையுடன் பதிலளித்திருந்தார்.


உடன் வர்கிஷ் என்பவர், ‘‘ரொம்ப கண்டிப்பான கலெக்டரா இருப்பாரோ’’ என பதிவிட, சுமன் கார்த்திக், ‘‘இப்படி மக்களுடன் நெருக்கமா இருந்தாலே மக்களின் பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்குமென்பதில் எந்த ஐயமுமில்லை. காவல்துறை மட்டும் நண்பன் இல்லை. நாங்களும் தான் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்...’’ என பதிவிட்டுள்ளார்.  தொடர்ந்து,‘‘இன்று திரும்ப மழை பெய்தால் நாளைக்கு லீவு விடுவீங்களா..’’, ‘‘ஐயா... நான் காலை 5 மணியில் இருந்து வெறித்தனமாக படித்து கொண்டிருக்கிறேன்’’ என அடுத்தடுத்து பதிவிட்டுள்ளனர். ஒரு ஐஏஎஸ் என்ற பந்தா எதுவும் இல்லாமல் நெட்டிசன்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விருதுநகர் கலெக்டர் மேகநாத் ரெட்டியின் நடவடிக்கைகள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

.com/img/a/

No comments:

Post a Comment