தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை கற்றல் கற்பித்தல் பணியை விட நிர்வாகப் பணிகளில் அதிகமாக ஈடுபடுத்துவதை பள்ளிக் கல்வித்துறை தவிர்க்க கோரிக்கை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, November 28, 2021

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை கற்றல் கற்பித்தல் பணியை விட நிர்வாகப் பணிகளில் அதிகமாக ஈடுபடுத்துவதை பள்ளிக் கல்வித்துறை தவிர்க்க கோரிக்கை

 


தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை கற்றல் கற்பித்தல் பணியை விட நிர்வாகப் பணிகளில் அதிகமாக ஈடுபடுத்துவதை பள்ளிக் கல்வித்துறை தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அதன் பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி, முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா பாதிப்புக் காரணமாக 18 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுழற்சி முறையில் பள்ளிகள் நடைபெற்று வரும் சூழலில் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி தவிர்த்து எமிஸ் இணையதளத்தில் ஆசிரியர் வருகைப்பதிவு மற்றும் மாணவர் வருகைப் பதிவை பதிவேற்றம் செய்வதால் தினமும் காலை 10.30 மணிவரை நேரத்தை இதற்காக செலவிட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இணைய இணைப்பு சரியாக செயல்படாத கிராமங்களில் எமிஸ் பதிவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆனால் கல்வி அதிகாரிகள் குறித்த நேரத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்றால் விளக்கம் கேட்கின்றனர்.

இன்டர்நெட் வசதி இல்லாத கிராமப்புறப் பகுதியில் ஆசிரியர், மாணவர்கள் வருகைப் பதிவு மேற்கொள்வதில் இடர்பாடுகள் ஏற்படுகிறது. குறிப்பாக அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இந்த பிரச்சனை அதிகம் உள்ளது.

ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணியை விட நிர்வாகப் பணிக்காக அதிகளவு நேரத்தையும் உடல் உழைப்பையும் செலவிட வேண்டியுள்ளது.

ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளைத் தவிர்த்து மற்ற பணிகளை ஆசிரியர் தலைமேல் சுமத்துவதால் மன உளைச்சலை ஏற்படுத்தி கற்றல் கற்பித்தல் பணி தடைப்பட்டுவதை தவிர்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களை தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் வலிறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி அனுப்பிய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment