உ.பி.யில் ஷாக்.. ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் லீக்.. தேர்வு ரத்து.. பலர் கைது! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, November 28, 2021

உ.பி.யில் ஷாக்.. ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் லீக்.. தேர்வு ரத்து.. பலர் கைது!

 உத்தரபிரதேச மாநிலத்தில் மாநில அளவிலான ஆசிரியர் தகுதி தேர்வு() நடத்தப்படுகிறது. இதில் தேர்வு பெறுபவர்கள் மட்டுமே அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிய முடியும்.இந்த தேர்வை அடுத்த மாதம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்கள் மிக ஆர்வமாக தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தனர்.செங்கல்பட்டில் காம்பவுண்ட் சுவர் வரை தேங்கியுள்ள வெள்ளம்.. திம்மாவரம் கால்வாயில் வெள்ளப்பெருக்குவாட்ஸ்- அப்பில் வெளியான வினாத்தாள்கள்இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள்கள் வாட்ஸ்- அப்பில் வெளியாகி அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து தேர்வை ரத்து செய்து உ.பி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் வினாத்தாள்கள் வாட்ஸ்- அப்பில் வெளியாக காரணமாக இருந்த பலரை கைது செய்துள்ளனர்.தேர்வு ரத்து செய்யப்படுகிறதுஇது தொடர்பாக மாநில கல்வி அமைச்சர் சதீஷ் திவேதி கூறியதாவது:- - தேர்வில் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் கூடுதல் கட்டணம் இல்லாமல் தேர்வெழுதியவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம். இந்த விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த சிறப்பு அதிரடிப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும்' என்று அவர் கூறினார்.ஏமாற்றமளிக்கிறதுஇந்த விவகாரத்தால் தேர்வு எழுத காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ''தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிந்தோம். தேர்வு ரத்து ஏமாற்றமளிக்கிறது, இது காலியிடங்களை பாதிக்கிறது. ஆனால் சரியான நேரத்தில் அதைப் பற்றி எங்களுக்குத் தெரிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்'' என்று புலந்த்ஷாஹரைச் சேர்ந்த கவுரவ் சர்மா கூறியுள்ளார்.அரசு அதிகாரிகளின் அலட்சியம்அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு மாணவர் கூறுகையில், 'அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே அரசு தேர்வு தேதிகளை மாற்றி அறிவித்தது. இப்போது அது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி இந்த தேர்வு எப்போது நடக்கும் என்று உறுதியாக தெரியவில்லை. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பேண்டும்' என்று கூறினார்..

No comments:

Post a Comment