மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது பற்றி பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்டால் அது குறித்த அறிக்கையை சிபிஎஸ்இ போர்டுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நவம்பர் 30ல் தொடங்கி டிசம்பர் 9 வரை நடைபெற உள்ளது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு டிசம்பர் 1ல் தொடங்கி 18ம் தேதி வரை நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment