இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு மொபைல் ஆப் அறிமுகம்
இல்லம் தேடிக் கல்வி திட்டமானது தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அமல் படுத்தப்பட்டு வருகிறது. அதற்கான தன்னார்வலர்களும் தேர்வு செய்யப்பட்டு விரைவில் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் தொடங்க உள்ளது.
இதற்காக இல்லம் தேடிக் கல்வி என்ற புதிய மொபைல் ஆப் ( illam thedi kalvi mobile app) தொடங்கப்பட்டுள்ளது. இதில் தன்னார்வலர்களுக்கான உறுதிமொழி, உங்கள் பகுதியில் உள்ள தன்னார்வலர்களை அறிந்துகொள்ளும் வசதி, கற்றல் வளங்கள், மாணவர் வருகை, கற்பித்த பாடங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.
How To Use Itk Mobile App
Play Store open செய்து illam thedi kalvi என்று Search செய்து வரும் ஆப்பை Download செயயவும். Open செய்தவுடன் Username, password கொடுத்து உள்ளீடு செய்யவும்
username: U-Dise Number
password: U-Dise Number@itk
கொடுத்து Submit கொடுத்து உள் நுழையவும்.
தன்னார்வலர்கள் விவரங்களை தெரிந்துகொள்வது எப்படி?
மாவட்டம் தொகுதியினை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்பு, வாழ்விடம் தேர்வு செய்து உங்கள் பகுதி தன்னார்வலர்கள் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment