தினம் ஒரு தகவல் எலிகளின் விநோத குணங்கள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, November 3, 2021

தினம் ஒரு தகவல் எலிகளின் விநோத குணங்கள்

எலிகளின் விநோத குணங்கள் அண்டார்டிகா தவிர உலகின் எல்லா இடங்களிலும் எலிகள் வாழ்கின்றன. சில இனங்கள் தரையிலும், சில பூமிக்கடியில் வளைகளிலும் மற்றும் சில வகை மரங்களிலும் வாழ்கின்றன. 


சில எலிகள் குளிர்காலம் முழுவதும் தூங்காமல் வாழ்கின்றன. பூமிக்குள் உணவை சேமித்து வைக்கும் எலிகளில் முதன்மையானது பெருச்சாளி. ஜெர்போஸ் வகை எலிகள் மணல் குன்றுகளின் மீது ஓடுவதற்கு ஏதுவான நீளமான கால்களைக் கொண்டுள்ளன. எலிகள் சுண்டெலியைவிட பெரியவை. எலிகளின் கால்களில் ஐந்து விரல்கள் உண்டு. 

உடலில் முடி நிறைந்திருக்கும், மீசை உண்டு, கடினமான வால் உள்ளது. சுமாரான பார்வைத்திறன் உண்டு. மரம், பிளாஸ்டிக், அலுமினியம், காரீயம், தாமிரம் போன்றவற்றை கடிக்கும் அளவுக்குக் கூர்மையான பற்கள் உண்டு. தான் வாழும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு எலிகளின் நிறமும் எடையும் வேறுபடும். எலிகள் தினந்தோறும் அவற்றின் எடையில் 5 முதல் 20 சதவீதம் வரை சாப்பிடுகின்றன. கருவுற்ற பெண் எலிகள் மனஅழுத்தம் அல்லது உணவுத் தட்டுப்பாட்டின் காரணமாக தனது கருவை திரும்ப உறிஞ்சும் அசாதாரண தன்மையை பெற்றிருக்கின்றன. 

 எலிகளுக்கு வலிமையான தாடை தசை உள்ளது. ஒரு ஜோடி வெட்டும் பற்கள் உள்ளன. அதனால்தான் உலோகம் போன்ற கடினப் பொருட்களையும் எலியால் எளிதாக கடிக்க முடிகிறது. உலகின் பல பகுதிகளில் எலிகளை உணவாக்கி சாப்பிடுகிறார்கள். வயல் பக்கம் கிடைக்கும் வெள்ளை எலியும் உண்ணப்படுகிறது.

 இந்திய 'மிஸ்மி' கலாசாரத்தில் எலிகள் பாரம்பரிய உணவாக உள்ளன. வட இந்தியாவில் முசாகர் இனத்தவர் எலியை உணவுக்காக வியாபார ரீதியாக வளர்க்கின்றனர். கானா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளிலும் எலியை உண்கின்றனர். வளர்ப்பு பிராணிகளுக்கும் எலியின் இறைச்சி உணவாக கொடுக்கப்படுகிறது.v

No comments:

Post a Comment