சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, November 29, 2021

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி

 பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்புபயிலும் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கவும், புதுப்பிக்கவும் இன்றே கடைசி தினம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


சிறுபான்மையினருக்கான பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் தகுதி அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்கள் அனைவரும் 30.11.2021-க்குள் தேசிய கல்வி உதவித்தொகை (NSP) (www.scholarships.gov.in) இணையதளத்தில் உடனடியாக புதுப்பித்து அதற்கான விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருமான சான்று சமர்ப்பிக்க அவசியமில்லை. ஆதார் விவரங்களில் பெயர் மாற்றம் காரணமாக புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்காதவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம்.


மேலும், அனைத்து கல்வி நிலையங்களும் கல்வி உதவித்தொகைக்கு தகுதியுள்ள மாணவர்களை உடனடியாக தொடர்பு கொண்டு இணையத்தில் 30.11.2021-க்குள் புதுப்பிக்க அறிவுறுத்த வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயனடையுமாறு அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment