கொல்கத்தாவில் உள்ள கடலோர காவல் படையில் நிரப்பப்பட உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி: Civilian MT Driver
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.19,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இரண்டு ஆண்டு பணி அனுபவமும், மோட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Fork Lift Operator
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.19,900
தகுதி: பணி சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவமும், பணிக்கேற்ற வாகனத்துக்குரிய கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
Application download : click here
பணி: MT Fitter/MT(Mech) காலியிடங்கள்: 03 சம்பளம்: மாதம் ரூ.19,900 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோமொபைல் ஒர்க்ஸ்ஷாப்பில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Fireman காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.19,900 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நல்ல உடற்திறன் பெற்றவராக இருக்க வேண்டும். உடற்திறன் தகுதி: உயரம் 165 செ.மீ, எடை 50 கிலோ, மார்பளவு 81.5 செ.மீ., விரிவடைந்த நிலையில் 85 செ.மீ இருக்க வேண்டும்.63.5 கிலோ எடையுள்ள மனிதனை சுமந்துகொண்டு 183 மீட்டர் தூரத்தை 96 வினாடிகளில் ஓடி கடக்க வேண்டும். 2.7 மீட்டர் அகலமுள்ள பள்ளத்தில் நீளம் தாண்டுதல் வேண்டும். 3 மீட்டர் செங்குத்தான கயிற்றில் மேலே ஏற வேண்டும். பணி: Engine Driver காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.25,500 தகுதி: பணிக்குரிய சான்றிதழ் பெற்றிருப்பதுடன், 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: MTS(Chowkidar) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.18,000 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் போட்டில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .வயதுவரம்பு: 18 முதல் 27, 30க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் அரசு விதிமுறைகளின்படி சலுகை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Commander, Coast Guard Regin(North East), Synthesis Business Park, 6th Floor, Shrachi Building, Rajarhat, New Town, Kolkata - 700 161. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 26.11.2021
No comments:
Post a Comment