தமிழகத்தில் துவங்கியுள்ள இல்லம் தேடி கல்வித் திட்டம் மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்பட வேண்டும்” என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட கூடுதல் இயக்குனர் நாகராஜமுருகன் வலியுறுத்தினார்.
மதுரையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் இடம் பெற்றுள்ள மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் டி.வி.எஸ்., மேல்நிலை பள்ளியில் நடந்தது. சி.இ.ஓ., சுவாமிநாதன் தலைமை வகித்தார்.இதில் நாகராஜமுருகன் பேசியதாவது:கொரோனா பேரிடரால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்கள் இழந்த கற்றல் இடைவெளியை போக்கும் வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
நுாறு சதவீதம் வெற்றியடைய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உட்பட கல்வித்துறையில் உள்ள அனைத்து பிரிவும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். மக்கள் இயக்கமாக இதை மாற்ற வேண்டும். நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மாவட்ட கல்வி அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும் ,என்றார்.
மாவட்டத்தை சேர்ந்த 65 கருத்தாளர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்றனர். பயிற்சிக்கான மாநில ஆலோசனை குழு உறுப்பினர் கணேசன், உதவி மாவட்ட திட்ட அலுவலர் திருஞானம் மற்றும் துணை ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment