சிலம்பம் வீரர்களுக்கு இனி இடஒதுக்கீடு..! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, November 18, 2021

சிலம்பம் வீரர்களுக்கு இனி இடஒதுக்கீடு..! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

 தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்களால் உருவாக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய இந்திய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டினை அரசு வேலைவாய்ப்புகளில் 3 விழுக்காடு விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள விளையாட்டுகளில் ஒன்றாக சேர்த்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுற்றுச்சூழல் இளைஞர்நலன் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்திருந்தார்.


ஒலிம்பிக் அகாடமிகள் மாநிலத்தின் நான்கு மண்டலங்களில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இங்கு உயர்திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்க மேடையை அடைவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் சிலம்பம்  குறித்த பாடப்பிரிவுகளை சேர்க்கவும்,  பல்கலைக்கழக அளவில் சிலம்பத்தை கொண்டு செல்லவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து  வருவதாகவும் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

No comments:

Post a Comment