2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் - தமிழக அரசு வெளியீடு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, November 5, 2021

2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் - தமிழக அரசு வெளியீடு

 தமிழகத்தில் அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி மற்றும் மத ரீதியான பண்டிகைகள் காரணமாக பொது விடுமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான பொது விடுமுறை பட்டியல் வெளியிடப்படும்.


அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது விடுமுறை தினங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2022ல் மொத்தமாக ஆண்டு முழுவதும் 23 நாட்கள் பொது விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசு தலைமைச் செயலாளர் வெ இறையன்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப்பூசம், குடியரசு தினம், வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு, தெலுங்கு வருடப் பிறப்பு, தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி, மே தினம், ரம்ஜான், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, மிலாது நபி, தீபாவளி, கிறிஸ்துமஸ் தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப் பட்டுள்ளது.


இந்த விடுமுறை தினங்களில் உழவர் தினம், மே தினம், பக்ரீத், காந்தி ஜெயந்தி, மிலாது நபி, கிறிஸ்துமஸ் என மொத்தம் 6 நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த விடுமுறை நாட்கள் பொருந்தும் என அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

IMG-20211103-WA0022

No comments:

Post a Comment