2014-18 பிளஸ் 2 தனித்தேர்வர் மார்க் ஷீட் பெற இறுதி வாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, November 14, 2021

2014-18 பிளஸ் 2 தனித்தேர்வர் மார்க் ஷீட் பெற இறுதி வாய்ப்பு

 மேல்நிலை பொதுத்தேர்வு தனித்தேர் வர்களால் மார்ச் 2014 முதல் செப். 2018 வரையி லான பெறப்படாத மதிப் பெண் சான்றிதழ்கள் பெறு வதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2014 முதல் செப்.2018 வரையிலான காலத்தில் தேர்வெழு திய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோக மையத்தில்தேர் வர்களால் நேரில் பெறப்ப டாமலும், அஞ்சல் மூலம் உரிய தேர்வர்களுக்கு அனுப்பி பட்டுவாடா ஆகாமலும், அசல் மதிப் பெண் சான்றிதழ்கள் திருச்சி அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவல கத்தில் திரும்பப் பெறப்பட் டுள்ளது.


சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அசல் மதிப்பெண் சான் றிதழ்களை கழிவுத்தாட்க ளாக மாற்றிடும் பொருட்டு அரசிதழில் அறிக்கை வெளி யிட நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. 


எனவே மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித் தேர்வர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பாகும். இத்த ருணத்தைப் பயன்படுத்தி ஒரு வெள்ளைத் தாளில் மதிப்பெண் சான்றிதழ் கோரும் விவரத்தைக் குறிப்பிட்டு தேர் வெழு திய பருவம், பிறந்த தேதி, பாடம் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு ரூ.45க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுயமுகவரி எழுதிய உறை ஒன்றை இணைத்து, உதவி இயக்குநர், அரசுத் தேர் வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், 16/1, வில்லி யம்ஸ் சாலை, மத்திய பஸ் நிலையம் அருகில், திருச்சி என்கிற முகவரிக்கு வரும் 31.12.2021ம் தேதிக்குள் அனுப்பி பெற்றுக்கொள்ள லாம். 


2014 முதல் 2018 பரு வத்திற்குப் பின்னர் தேர் வெழுதிய பருவங்களுக் கான அசல் மதிப்பெண் சான்றிதழையும் பெற் றுக்கொள்ளலாம். 2014 முதல் 2018 வரையிலான மேல்நிலை பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் பெறுவதற்கு விண்ணப் பிக்க வேண்டிய கடைசி தேதி 31.12.2021 ஆகும் என திருச்சிகலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment