திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் நவம்பர் 19 ம் தேதி கார்த்திகை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் புகழ் பெற்ற முக்கிய விழாக்களில் ஒன்று கார்த்திகை தீப திருநாள். இந்த திருவிழா திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பிக்க கொண்டாடப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரக்கூடிய இந்த் நன்னாளில் அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இதை காண அனைத்து மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிவர்.
வழக்கம் போல இந்தாண்டும் அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து கடந்த 11 ம் தேதி திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. திருவிழாவானது 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வாக நவம்பர் 19 ம் தேதி மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலைகோயில் உச்சியில் மகா தீப கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.
அன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மகா தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். கொரோனா தொற்று ககுறையாமல் இருப்பதால் பக்தர்கள் அதிகம் கூட டதை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 17 முதல் 20 ம் தேதி வரை மது கடைகளை மூட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது நவம்பர் 19 ம் தேதி உள்ளுர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment