10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, November 17, 2021

10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

 

tnpsc-exam-16353532863x2

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி மாணவர்களின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் 10, 11-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதேநேரம் தனித்தேர்வர்களுக்கு 10-ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி 10-ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 16 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வின் முடிவுகள் வரும் 19-ம் (19.11.2021) தேதி காலை 11 மணிக்கு வெளியாகும். www.dge.tn.gov.in தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் :


தனித்தேர்வர்கள் வருகிற 19-ம் தேதி காலை 11 மணிக்கு www.dge.tn.gov.in தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேற்படி இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன் Notification SSLC Examination Provisional mark Sheet SSLC Result Sep 2021 எனத் தோன்றும் வாசகத்தினை கிளக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தேர்வு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை

செப்டம்பர் 2021 தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 22.11.2021 மற்றும் 23.11.2021 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment