எடை குறைப்பில் செய்யும் தவறுகள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, October 17, 2021

எடை குறைப்பில் செய்யும் தவறுகள்



உடல் எடையைக் குறைப்பதற்காக தீவிரமாக முயற்சி செய்தும் பலன் இல்லாமல் கவலைப் படுபவர்கள் அதிகம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருமே உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்படுகிறார்கள். எடையைக் குறைத்து, தொப்பை இல்லாத 'ஜீரோ சைஸ் வயிறு' என்பது பலரது கனவாக இருக்கிறது. 

இந்த நோக்கத்தில் பல முயற்சிகளை மேற்கொள்ளும்போது, நம்மை அறியாமலே ஒரு சில தவறுகளைச் செய்கிறோம். அதுவே எடை குறையாமல் இருப்பதற்கு காரணமாக அமைகிறது. முதலில் மனது தயாரானாலும், எடைக் குறைப்புக்கு உடல் தயாராகுவதற்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால்தான் உடல் எடையை ஆரோக்கிய மாகக் குறைக்க முடியும். 

உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது செய்யும் பொதுவான தவறுகள் பற்றியும், சரி செய்யும் விதம் பற்றியும் இங்கே பார்க்கலாம்.) உணவுக் குறைப்பு சிலர் உண்ணும் உணவைக் குறைப்பதற்காக வழக்கமாகச் சாப்பிடும் அளவில் நான்கில் ஒரு பங்கு சாப்பிடுவார்கள். 

இதனால் பசி அதிகரித்து அவதிப்படுவார்கள். ஒரு கட்டத்தில் கட்டுப்பாடு இல்லாமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அதனால் பிடித்த உணவை அதிகம் உண்ணாமலும், அதிகம் தவிர்க்காமலும் அளவாகச் சாப்பிடுங்கள். சிலர் உடல் எடையைக் குறைப்பதற்காக பழச்சாறு அருந்துவார்கள். 

ஆனால் பழச்சாறுகள் உடல் எடை  குறைப்புக்கு உதவுவதைக் காட்டிலும், அதிக அளவு பசியைத் தூண்டிவிடும். அதிவேக உடற்பயிற்சி உடல் எடையைக் வேகமாக குறைப்பதற்காக, தொடர்ந்து அதிவேக உடற்பயிற்சியில் ஈடுபடுவதும் தவறு. இது உடல் எடைக் குறைப்புக்கு பதிலாக சோர்வை உண்டாக்கும். மாடிப்படிகளில் ஏறி இறங்குதல், குனிந்து நிமிர்தல், தோப்புக்கரணம் போடுதல் என தினசரி அரைமணி நேரம் எளிமையான பயிற்சிகள் செய்தாலே போதும். 

துரித உணவு தவிர்த்தல் துரித, கொழுப்பு உணவுகளையும் உடனடியாகத் தவிர்க்கலாம். உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் உணவைக் குறைத்துவிட்டு, நொறுக்குத் தீனிகள் சாப்பிட்டு வயிற்றை நிரப்புவார்கள். இதுவும் எடை குறையாமல் இருப்பதற்கு காரணமாகும். 

உணவுக் கட்டுப்பாடு உணவுக் கட்டுப்பாட்டை ஓரிரு நாட்கள் பின்பற்றிய பிறகு, இடையில் இரண்டு நாட்கள் பின்பற்றாமல் இருந்து மீண்டும் தொடர்வது எந்தப் பலனையும் கொடுக்காது. எடையைக் குறைப்பதற்கு கருத்தில் கொள்ள வேண்டிய பிற விஷயங்கள்: 

7 முதல் 8 மணி நேர உறக்கம் அவசியம். இரவு உணவு அளவாக இருக்க வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருக்காமல் அவ்வப்போது எழுந்து நடக்கலாம்.

No comments:

Post a Comment