அரசுப் பள்ளியில் பயின்று ஐஐடியில் சேரும் மாணவரின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர்அரசுப் பள்ளியில் பயின்று ஐஐடியில் சேரும் மாணவரின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர்
சென்னை: அரசுப்பள்ளியில் படித்து ஐ.ஐ.டி பொறியியல் படிப்பில் சேரும் திருச்சி, கரடிப்பட்டி கிராமத்து மாணவர் அருண்குமாரின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சேவல்பட்டி அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்புப் படித்த மாணவர் அருண்குமார், ஜேஇஇ தேர்வில் 17,061வது இடமும், ஜேஇஇ மெயின் தேர்வில் 12,172வது இடத்தையும் பிடித்துள்ளார்.
இவர், ஐஐடி ஹைதராபாத்தில் பொறியியல் படிக்க தேர்வாகியுள்ளார். இன்று மாணவர் அருண்குமாரில் நேரில் அழைத்து பாராட்டிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரது கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார்
இது குறித்த தகவலை ஸ்டாலின் தனது சுட்டுரையிலும் பதிவிட்டுள்ளார். அதில், அரசுப்பள்ளியில் படித்து ஐ.ஐ.டி பொறியியல் படிப்பில் சேரும் திருச்சி, கரடிப்பட்டி கிராமத்து மாணவர் அருண்குமாரை நேரில் அழைத்துப் பாராட்டினேன்!
எளிய பின்புலத்திலிருந்து தேர்ச்சி பெற்றுள்ள அவரின் கல்விச்செலவை அரசே ஏற்கும். இலட்சியக் கனவுகளுடன் பயணிப்பவர்களுக்கு அரசு துணை நிற்கும் என்று பதிவிட்டுள்ளார் முதல்வர்.
No comments:
Post a Comment