திருச்சியில் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினவிழா நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் மகேஷ் பெய்யாமொழி, பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஒரு மாணவி, இந்தாண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்று அமைச்சரிடம் கேட்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர், 10 மற்றும் 12ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதத்திலும், பொதுத்தேர்வை மார்ச் மாதமும் நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
முதல்வரின் அனுமதி பெற்று இதற்கான சுற்றறிக்கைகள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment