மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்.எஸ்.சி.) பல்வேறு துறைகளில் பல்நோக்கு பணியாளர், பெண்கள் படை பயிற்சிவிப்பாளர், மருத்துவ உதவியாளர் போன்ற 3,261 காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணைய இணையதளம் மூலமாக வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு இன்று (சனிக்கிழமை) முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடத்தப்பட உள்ளது.
அதனால் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 04142-290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ பதிவு செய்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment