அரசு கல்லுாரிகளில் பிஎச்.டி., புதிய பிரிவுகள் அறிமுகம்
அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், புதிய பாட பிரிவுகளில், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, உயர் கல்வித் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள அரசாணை:அரசு கலை, அறிவியல்கல்லுாரிகளில், பிஎச்.டி.,ஆராய்ச்சி படிப்பில், புதிய பாட பிரிவுகளை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செங்கல்பட்டு அரசு கலை கல்லுாரியில், வணிகவியல்; சேலம் கல்லுாரியில், தாவரவியல்; கோவை அரசு கலை கல்லுாரியில், தகவல் தொழில்நுட்பம்; நாமக்கல் அறிஞர் அண்ணா கலை கல்லுாரியில், விலங்கியல் பாட பிரிவுகளில், ஆராய்ச்சி படிப்பு துவங்கலாம்.
திருச்சி ஈ.வெ.ரா. கல்லுாரியில், உயிர் வேதியியல்; திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கல்லுாரியில், ஆங்கிலம்; கும்பகோணம் அரசு கலை கல்லுாரியில், இயற்பியல்; கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ். சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலை கல்லுாரியில், ஆங்கிலம்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில், சர்வதேச வணிகம் பாட பிரிவுகளில் ஆராய்ச்சி பிரிவு துவக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment