வங்கி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, October 8, 2021

வங்கி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு

வங்கி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு 

சிவந்தி அகாடமி சார்பில் வங்கி தேர்வுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பு வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. வங்கி தேர்வு இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.பி.எஸ்.) நடத்தும் பொதுத்துறை வங்கி புரபேஷனரி ஆபீசர் மற்றும் கிளார்க் பணிக்கான எழுத்து தேர்வு வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த தேர்வை எழுதலாம். 

 இந்த எழுத்து தேர்வில் சிறப்பாக வெற்றிபெற உதவும் வகையில் வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் சிவந்தி அகாடமி சார்பில் வருகிற 25-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 18-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. பயிற்சிகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். பயிற்சியின்போது ஆன்லைன் மூலம் 20 மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். 

 இலவச புத்தகங்கள் இதில் சேருபவர்களுக்கு வங்கி தேர்வுகளில் இடம் பெறும் காமன் சென்ஸ் ரிசனிங், பஸில், நியூமெரிக்கல் எபிலிட்டி, குவாண்டிடேட்டிவ் ஆப்ட்டியூடு, இங்கிலீஸ் லாங்குவேஜ், ஸ்ட்டாடிக், ஜி.கே., டேட்டா இன்டர்பிரட்டேசன் ஆகிய தலைப்புகளில் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த புத்தகங்கள் சிவந்தி அகாடமியின் சார்பில் பயிற்சி பெறுபவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அனுபவம் மிக்க வல்லுனர்களால் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. 

இந்த பயிற்சி வகுப்பில் சேர பயிற்சி கட்டணம் ரூ.5,500 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 22-ந் தேதி ஆகும். தொலைபேசி எண் பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ஒரு வெள்ளை தாளில் தங்களது புகைப்படத்தை ஒட்டி, பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்களை குறிப்பிட்டு எழுதி, ரூ.5,500-க்கான டிமாண்ட் டிராப்ட் (கனரா வங்கி அல்லது ஐ.ஓ.பி., ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அல்லது இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர் 628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04639 242998, 8682985148 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment