தஞ்சாவூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
பிறப்பிப்பவர்- திரு.மு.சிவகுமார், எம்.எஸ்சி., பி.எட், எம்ஃபில்.,
ந.க.எண்.0614/ஆ2/2019 நாள்.04.10.2021.
பொருள்:
பொதுப்பணிகள் 22.01.2019 முதல் நடைபெற்ற
வேலைநிறுத்த
போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது
தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டு அரசாணை
வெளியிட்டமை - தொடர் நடவடிக்கை மேற்கொள்ளல் - தொடர்பாக.
பார்வை: 1.
தஞ்சாவூர் காவல்துறை அதிகாரியின் கடித ந.க.எண்.சி1/2725/2019
நாள் 29.01.2019
2. தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.0614/ஆ2/2019 நாள்.27.01.2019 மற்றும் 29.01.2019.
3. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண்.74086/23/21/2019 நாள் 13.02.2019.
4. அரசாணை நிலை எண்.9 பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த் திருத்தத்
(கே) துறை நாள்.02.02.2021.
5. தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
ந.க.எண்.028761/03/இ1/2021 நாள்.30.06.2021.
பார்வை 2 இல் காணும் இவ்வலுவலக செயல்முறைகளின் படி, 22.012019
முதல் 30.01.2019 நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப்
பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும்
குற்றவியல் வழக்குகள் கைவிடப்பட்டதாக ஆணை வெளியிட்டதின் பேரில்
கைவிடப்பட்டு அதன் சார்பான பதிவுகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட பணியாளர்கள்
மற்றும்
ஆசிரியர்கள் பணிப்பதிவேட்டில் பதிவுகள் செய்யுமாறு சம்மந்தப்பட்ட
அலுவலர்கள் / தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பார்வை 5 இல் காணும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின்
செயல்முறைகளின் படி, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பின் அதனை விலக்கிக்
கொண்டு மீளப் பணியமர்த்தப்பட்டவர்கள் சார்பான தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட
நாள்கள், அடிப்படை விதிகள், விதி 54(பி) இன் படி பணிக்காலமாக முறைப்படுத்தப்பட
வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இணைப்பில் காணும் பட்டியலில்
உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் 30.01.2019 முதல் 13.02.2019
வரை தற்காலிக பணிநீக்க காலத்தினை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை
வழங்கப்படுகிறது.
பணிக்காலமாக முறைப்படுத்தப்படும் நாட்களுக்கு விதிகளின் படி
ஊதியம்
மற்றும் படிகளை பெற்று வழங்க இதன் மூலம் அனுமதித்து
ஆணையிடப்படுகிறது.
இணைப்பு - பெயர்ப்பட்டியல் (7 ஆசிரியர்கள்)
முதன்மைக்கல்வி அலுவலர்,
தஞ்சாவூர்.
பெறுநர்:
பட்டியலில் காணும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள். '
(இரட்டைப் பிரதிகளில் சார்பு செய்து சார்பு நகல், சம்மந்தப்பட்ட முதுகலை ஆசிரியர்களின்
பணிப்பதிவேட்டில் பதிவுகள் மேற்கொண்டு ஒலிம நகலினை அனுப்பும்பொருட்டு),
நகல் - மாவட்டக் கல்வி அலுவலர், தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் ஒரத்தநாடு.
No comments:
Post a Comment