மாஜி ராணுவத்தினருக்கு ரயில்வேயில் பணி
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை, ரயில்வே கேட் கீப்பர் பணியிடங்களில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஆட்களை நியமனம் செய்யும் பணி துவங்கியுள்ளது.முதல் கட்டமாக ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில், கேட் கீப்பர்கள் நியமிக்கப்படுகின்றனர்.'இந்த பணிக்கு முன்னாள் ராணுவத்தினரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கலாம்' என, ரயில்வே வாரியம், அனைத்து மண்டலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
அதன்படி கேட் கீப்பர், பாலம் வேலை நடக்கும் இடங்கள், ரயில் பாதை உள்ளிட்ட பாதுகாப்பு சார்ந்த பணியிடங்களில், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் நியமிக்கப்பட உள்ளனர்.ரயில்வே துறை உயரதிகாரிகள் கூறுகையில், 'கோட்டம் வாரியாக காலியாக உள்ள பாதுகாப்பு சார்ந்த பணியிடம், காலியிடம் விபரம் சேகரிக்கப்படுகிறது. 'அந்த இடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், முன்னாள் ராணுவத்தினருக்கு பணி வழங்கப்படும்' என்றனர்.
No comments:
Post a Comment