பள்ளிகள் திறப்பு: அரசாணை வெளியீடு
தமிழக பள்ளிகளில் ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன; கல்லுாரிகளும் இயங்கி வருகின்றன.
ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாணவ - மாணவியருக்கான வகுப்புகள், நவ., 1 முதல் நடத்த அனுமதிக்கப்படும் என, முதல்வர் அறிவித்தார்.இதற்கான அரசாணையை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது. இதனால், நவ., 1ல் இருந்து, ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து மாணவர்களுக்கும், பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படுவது உறுதியாகி உள்ளது.
No comments:
Post a Comment