மாணவர்கள் ஜாதி பட்டியல் : திருத்தம் செய்ய அறிவுரை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, October 15, 2021

மாணவர்கள் ஜாதி பட்டியல் : திருத்தம் செய்ய அறிவுரை

மாணவர்கள் ஜாதி பட்டியல் : திருத்தம் செய்ய அறிவுரை பள்ளி மாணவர்களுக்கான ஜாதி பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளி மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, பிறந்த தேதி, ஜாதி, இனம் உள்ளிட்ட விபரங்கள், எமிஸ் என்ற கல்வி மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் இந்த தளத்தில், தலைமை ஆசிரியர்கள் சார்பில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர் விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இதில், சில ஜாதி பெயர்களை திருத்தம் செய்து பட்டியலிட, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். வன்னியர் பிரிவில் வரும் ஜாதிகளை இணைத்து, எம்.பி.சி., வன்னியர் பிரிவு பட்டியலில் கவனமாக சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பட்டியலில் உள்ள கல்லாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய ஜாதிகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்ற தலைப்பில் சேர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment