ஆவின் இனிப்புக்கு மொத்த ஆர்டர்: அரசு அலுவலகங்களில் பெற முயற்சி
:அரசு அலுவலகங்களுக்கு ஆவின் சிறப்பு இனிப்பு வகைகளை மொத்தமாக விற்பனை செய்வதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன.
கடந்த தீபாவளி பண்டிகையின் போது, ஆவின் பால், நெய், வெண்ணெய் உள்ளிட்டவை, 13 கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்டது. ஆவின் சிறப்பு இனிப்புகள் மட்டும், 1.50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன.தற்போது, ஐந்து வகை புதிய இனிப்புகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இவற்றை, 25 டன் அளவிற்கு விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வெண்ணெய், நெய் உள்ளிட்டவற்றையும் அதிகம் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.ஆவின் நிறுவன உற்பத்தி பொருட்கள், பண்டிகை காலங்களில், கூட்டுறவு துறை வாயிலாக கொள்முதல் செய்யப்பட்டு, அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கென ஆவின் பொருட்களை கொள்முதல் செய்ய, தனி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மற்ற அரசு துறைகள், ஆவின் இனிப்புகளை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. தனியார் கடைகளில், சதவீத அடிப்படையில் சலுகை பெற்று இனிப்புகள் வாங்கப்படுகின்றன.இந்தாண்டு, அரசு அலுவலகங்களுக்கு ஆவின் இனிப்புகளை விற்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென, சம்மந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளை ஆவின் நிர்வாகம் அணுகியுள்ளது.
No comments:
Post a Comment