எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, துணை கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டு உள்ளது.இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இதற்கான ஆன்லைன் கவுன்சிலிங்கில், மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில், துணை கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.இதன்படி, ஆன்லைன் கவுன்சிலிங்கில் இட ஒதுக்கீடு பெறாதவர்கள், தங்களின் விண்ணப்பம் மற்றும் இதர சான்றிதழ்களுடன், கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லுாரிக்கு செல்ல வேண்டும்.எம்.சி.ஏ., படிப்புக்கு நாளையும், எம்.பி.ஏ., படிப்புக்கு, 18ம் தேதியும் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. விபரங்களை, www.tn-mbamca.com என்ற இணையதளத்தில், தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment