டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் அறிவிப்பு
ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிகளுக்கு, பணி நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசு பணியாளர் தேர்வாணைய மான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:
நிதி துறையில், ஆராய்ச்சி உதவியாளர் பணியில், ஆறு இடங்களை நிரப்ப, அடுத்த ஆண்டு ஜன., 22ல் போட்டி தேர்வு நடத்தப்படும். இதற்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. நவ., 19ம் தேதிக்குள் விண்ணப்ப பதிவை முடிக்க வேண்டும்.
இந்த பதவிக்கு, பொருளியல், வணிக நிர்வாகம், பொருள் அளவியல், புள்ளியியல், கணிதம், சமூக பணி, சமூகவியல், மானுடவியல், பொது நிர்வாகம் மற்றும் வேளாண் பொருளியல் உள்ளிட்ட, ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Read More Jobs News
CLICK HERE
அதேபோல், சுகாதாரத் துறையில், தடுப்பூசி கிடங்கு காப்பாளர் பதவியில், 30 காலியிடங்கள்; வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவியில், 161 மற்றும் புள்ளியியல் உதவியாளர் பதவியில், 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கான போட்டி தேர்வு, ஜன., 9ல் நடத்தப்படும். இதற்கான விண்ணப்ப பதிவு, ஏற்கனவே துவங்கியுள்ளது. நவ., 19க்குள் பதிவை முடிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment