நாகை மாவட்டம், வேதாரண்யம் , தோப்புத்துறையில் வண்ணமின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி 9ஆம் முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
பொது முடக்கத்தால் முடங்கிய பள்ளிகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதையடுத்து, மாணவர்களை ஈர்க்கும் வகையில் பள்ளிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment