இல்லம் தேடி கல்வி’ திட்ட சிறப்பு பணிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
‘இல்லம் தேடி கல்வி’ திட்ட சிறப்பு பணி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், கோவை வணிக வரிகள் இணை கமிஷனராக (மாநில வரிகள்) மாற்றப்பட்டுள்ளார். கோவை வணிக வரிகள் இணை கமிஷனர் (மாநில வரிகள்) ஐ.எஸ்.மெர்சி ரம்யா, சென்னை வணிக வரிகள் இணை கமிஷனராக (நுண்ணறிவு பிரிவு-1) மாற்றப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் கே.இளம்பகவத், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் சிறப்பு பணி அதிகாரியாக (பள்ளிக்கல்வி ஆணையர் அலுவலகம்) மாற்றப்பட்டு உள்ளார்.
புதுக்கோட்டை சப்-கலெக்டர் எஸ்.பாலசந்தர், மின் ஆளுமை இணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
அவர் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுவார்.
‘சிப்காட்’ நிறுவன செயல் இயக்குனராக...
ஓசூர் சப்-கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ‘சிப்காட்’ நிறுவன செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா ராணா, ஊட்டி மலை பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment