"தந்தைக்கு மட்டுமல்ல நாட்டிற்கே பெருமை". பெட்ரோல் பங்க் ஊழியரின் மகள் செய்த சாதனை. குவியும் பாராட்டு.!! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, October 8, 2021

"தந்தைக்கு மட்டுமல்ல நாட்டிற்கே பெருமை". பெட்ரோல் பங்க் ஊழியரின் மகள் செய்த சாதனை. குவியும் பாராட்டு.!!

"தந்தைக்கு மட்டுமல்ல நாட்டிற்கே பெருமை". பெட்ரோல் பங்க் ஊழியரின் மகள் செய்த சாதனை. குவியும் பாராட்டு.!! கேரளாவில் பெட்ரோல் பங்கில் வேலை செய்பவரின் மகள் ஐஐடி கான்பூரில் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


 கேரளா மாநிலம் பையனூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் நபர் ராஜகோபாலன். இவரின் மகள் ஆர்யா. இவர் தற்போது ஐஐடியில் தேர்வாகியுள்ளார். இதற்கு இணையத்தில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியை அறிந்த மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஐடியில் ஆர்யா தேர்வானது அவரின் தந்தைக்கு மட்டுமல்ல நாட்டிற்கே பெருமை என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யாவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராஜகோபாலின் மகள் ஆர்யாவின் கதையை பகிர்ந்து ஆர்யா ஐஐடி கான்பூரில் நுழைவது எங்களுக்கு பெருமை. ஆர்யாவிற்கு நல்வாழ்த்துக்கள் என ட்வீட் செய்துள்ளார்.

1 comment: