திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது;-
மற்ற துறைகளைபோல் ஜீரோ கவுன்சிலிங் என்பதை பள்ளிக்கல்வித்துறையில் நடத்துவது கடினம். இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசனை கேட்டு, அதன்படி முடிவு எடுக்கப்படும். கொரோனா காலத்தில் கல்வி தொலைக்காட்சிதான் குழந்தைகளுக்கு ஏதுவாக இருந்தது. இனி வரும் காலங்களிலும் அது செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் கல்வி மாவட்டங்கள் அதிகரிப்பதற்கான சூழ்நிலை தற்போது இல்லை. தற்போதுள்ள 120 கல்வி மாவட்டங்கள் மட்டுமே இயங்கும். பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு சில பள்ளிகளில் உத்திராட்சம் அணிந்து வரக்கூடாது என்று கட்டாயப்படுத்துவது முற்றிலும் தவறு. மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது அவர்களை முகம் மலர்ந்து வரவேற்க வேண்டும். தவறாக நடந்து கொள்ளக்கூடாது என்று சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment