தமிழகத்தில் ஏழாவது மெகா தடுப்பூசி முகாம், நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட சுகாதார துணை இயக்குனர்களுடன் அமைச்சர் சுப்பிரமணியன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தடுப்பூசி போடும் பணியில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் அலுவலர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கையால், குடியரசு தினத்தன்று பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். தமிழகத்தில் தற்போது வரை, 5.44 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. மெகா முகாம்களில் சராசரியாக 20 லட்சம் தடுப்பூசி செலுத்தப்படுவது பாராட்டத்தக்கது.இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment